
செய்திகள் உலகம்
மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை: இந்தோனேசியா திட்டவட்டம்
ஜகார்தா:
இந்தோனேசியாவுக்கான தூதரை தேர்வு செய்வது மலேசியாவின் உள் விவகாரம், உரிமை என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தோனேசியா தலையிடாது என்றும் அந்த அமைச்சு கூறியதாக ஜகார்தாவின் டெம்போ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தூதரை நியமிப்பது மலேசிய அரசாங்கத்தின் தனி உரிமை என்றும், மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில் இருந்து இந்தோனேசியா விலகி நிற்க விரும்புகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Teuku Faizasyah தெரிவித்துள்ளார்.
"மலேசிய உள்நாட்டு அரசியல் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாவதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் நாங்கள் இதில் தலையிடக் கூடாது.
"தூதர்களை நியமிப்பது அந்தந்த நாடுகளின் உரிமை. அவை உள்நாட்டு நடைமுறைப்படி தூதர்களைத் தேர்வு செய்கின்றன. அவ்வாறு தேர்வாகும் தூதர்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படும். அதன் பிறகு தூதர்கள் ஜகார்தாவுக்கு அனுப்பப்படுவார்கள்.
"இந்தோனேசியாவைப் பொருத்தவரை மற்ற நாடுகளுக்கான தூதர்களைத் தேர்வு செய்வதில் கூடுதலாக ஒரு நடைமுறை உள்ளது. அதாவது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது," என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Teuku Faizasyah மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 11:12 pm
தென் கொரியாவின் பலூன்களால் கொரோனா பரவல்: வட கொரியா குற்றச்சாட்டு
July 3, 2022, 10:54 pm
இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லை: அமெரிக்க ஆணையம் கண்டனம்
July 1, 2022, 10:43 am
சிறுபான்மை இனத்தவரும் சிங்கப்பூர் பிரதமராக முடியும்: அமைச்சர் சண்முகம்
July 1, 2022, 1:51 am
சிங்கப்பூரில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல்
June 30, 2022, 5:27 pm
நேபாளத்தில் வேகமாக பரவும் காலரா: பானிப்பூரிக்கு தடை
June 29, 2022, 10:29 pm
இலங்கைக்கு அமெரிக்கா கூடுதல் நிதி உதவி
June 26, 2022, 3:05 pm
அமெரிக்கப் போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு
June 25, 2022, 3:51 pm
இடைத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் கட்சி தோல்வி
June 24, 2022, 7:21 pm
குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்
June 23, 2022, 8:18 pm