நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது: பிரதமர் ரணில்

கொழும்பு:

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது என்று பிரதமர் ரணில் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசுகையில், "உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1,243 கோடி) கிடைத்துள்ளது.

"அந்த நிதியில் சிறிதளவை எரிபொருள் வாங்குவதற்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

"அதேவேளையில், ஆசிய வளர்ச்சி வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகையை இலங்கை செலுத்தத் தவறியதால், அந்த வங்கியிடம் இருந்து கடன் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது'' என்றார் அவர்.

இதனிடையே, இலங்கையில் பெட்ரோல் முழுமையாக முடிவடைந்துவிட்டதாகவும், பெட்ரோலுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset