
செய்திகள் மலேசியா
பூர்வக்குடி சமுதாயத்தின் இளைஞர்களை மேம்படுத்த மனிதவள அமைச்சு நடவடிக்கை: டத்தோஸ்ரீ எம். சரவணன்
வாஷிங்டன்:
நாட்டில் உள்ள பூர்வக்குடி சமுதாயத்தின் இளைஞர்களை மேம்படுத்தும் வகையில் மனிதவள அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
"என்னுடைய அமெரிக்க பயணத்தின் போது மைக்ரோ சோஃபட் நிறுவனத்துடன் இவ் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
"இப் பேச்சுவார்த்தைகளில் வாயிலாக பூர்வக்குடி சமுதாயத்தின் இளைஞர்களை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் எர்ஆச்டி கோர்ப்பும் மைக்ரோ சோஃப்ட் நிறுவனமும் இணைந்து செயல்படவுள்ளன.
"இந்தத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் முக்கிய இலக்கு ஊக்குவிப்பதாகும்.
"இந்த முயற்சிகள் இளைஞர்கள் குறிப்பாக பூர்வக்குடி சமூகம் தங்களை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.
"இது மறைமுகமாக இளைஞர்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கும் வேலை உலகில் தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகளை அளிக்கும்.
"எனவே, இந்த முன்முயற்சியின் தொடக்கமாக, பேரா தாப்பாவில் உள்ள பூர்வக்குடி சமூக இளைஞர்களுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்துமாறு எச்ஆர்டி கோர்ப்பை கேட்டுக் கொண்டுள்ளேன்.
"இத் திட்டத்தின் வாயிலாக தாப்பாவில் உள்ள சுமார் 100 பூர்வக்குடி குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்தத் திட்டத்தை விரைவில் பூர்வக்குடி சமூகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்"
இவ்வாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 4:14 pm
மண் லோரி மீது கார் மோதிய சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்
October 21, 2025, 3:22 pm
மலேசியாவின் சந்தை ஒருமைப்பாட்டை அதிகரிக்க வணிக முடிவுகளில் நான் தலையிடுவதில்லை: பிரதமர் அன்வார்
October 21, 2025, 9:48 am
கூலிம் பட்டாசு வெடி விபத்து தொடர்பில் 2 பேர் கைது
October 21, 2025, 9:00 am
ஜோகூரில் யானைகள் நடமாட்டம்
October 20, 2025, 6:37 pm