நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரிக்பீல்ட்ஸில் விவேகானந்தர் சிலை நிறுவப்பட்டது: டான்ஸ்ரீ அம்பிகைபாகன்

கோலாலம்பூர்:

மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரிக்பீல்ட்ஸில் விவேகானந்தர் சிலை நிறுவப்பட்டது.

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே. அம்பிகைபாகன் இதனை கூறினார.

சுவாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்தநாள் விழா கடந்த ஜனவரி 12ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் விவேகாந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சி. சாரதி ஏற்பாட்டில் விவேகானந்தரின் பிறந்தநாள் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக விவேகானந்தர் போன்று துடிப்புமிக்க தலைவரான டத்தோஸ்ரீ சரவணன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த விவேகானந்தர் சிலை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிறுவப்பட்டது.

சென்னையில் வடிவமைக்கப்பட்டு இச்சிலை மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்  இச்சிலை இங்கு நிறுவப்பட்டது என்று டான்ஸ்ரீ அம்பிகைபாகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset