நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச பக்தர்களுக்காக்க  புந்தோங் சுங்கை பாரி மேம்பாலம் தற்காலிகமாக திறக்கப்படும்: துளசி

ஈப்போ:

தைப்பூச பக்தர்களுக்காக்க புந்தோங் சுங்கை பாரி மேம்பாலம் தற்காலிகமாக திறக்கப்படும்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் இதனை கூறினார்.

புந்தோங்,  மற்ற இடங்களுக்கு செல்ல ஜாலான் துன் ரசாக் சாலையில் உள்ள பிரதான பாலத்தின் நிர்மாணிப்பு பணி இன்னும் நிறைவு பெறவில்லை.

இருந்தபோதும் தைப்பூசத்தை முன்னிட்டு ஈப்போ உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பால் குடம், காவடிகள் எந்திச் கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாலத்தின் பகுதி திறந்துவிடப்படும்.

இரவில் விளக்கினால் அலங்கரிக்கப்பட்டும் காவடிகள் ஏந்திச் செல்லும் பக்தர்கள் மூன்று டன் கொண்ட லாரிகளை மட்டும் அந்த பாலத்தில் கடந்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

ஒரு சில காரணங்களுக்காக குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த பாலம் நிர்மாணிப்பு பணி முடியவில்லை .

ஆகவே தைப்பூச நாளில் அதிகமான பக்தர்கள் அந்த பாலத்தை பயன் படுத்தவேண்டியிருப்பதால் அந்த பாலத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படடுள்ளது.

அது தொடர்பாக சம்பந்தப்பட்ட இலாக்காக்களுடன் பேசியுள்ளதாகவும் இம்மாதம் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரைக்கும் அந்த பாலத்தை பக்தர்கள் பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை அளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset