நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஸ்டார் சிங்கர் போட்டியின் குரல் தேர்வு நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெறவுள்ளது: ஏகே குமார்

கோலாலம்பூர்:

மலேசிய ஸ்டார் சிங்கர் போட்டியின் குரல் தேர்வு நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

மலேசிய இந்தியர் பொதுநலக் கழகத்தின் தலைவர் ஏகே குமார்  இதனை கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய மாணவர்களிடையே உள்ள பாடும் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்போட்டி இவ்வாண்டு நடைபெறவுள்ளது.

இதன் அடிப்படையில் இப்போட்டிக்கான குரல் தேர்வு நாடு முழுவதும்  நடத்தப்படவுள்ளது.

குரல் தேர்வின் தொடக்க சுற்று வரும் பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணிக்கு கூலிம் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும்.

இரண்டாவது நிகழ்வு பிப்ரவரி 28ஆம் தேதி பினாங்கு வால்டோர் தோட்ட தமிழ்ப்பள்ளியில் நடைபெறும்.

மார்ச் 1ஆம் தேதி பேராக்கின் கம்போங் சிமி தமிழ்ப்பள்ளியிலும் ஏப்ரல் 4ஆம் தேதி சிலாங்கூர் கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளியிலும் நடைபெறும்.

மே 2ஆம் தேதி நெகிரி செம்பிலான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

மே 23ஆம் தேதி மலாக்கா டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளியிலும் ஜூன் 13ஆம் தேதி ஜொகூர் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த குரல் தேர்வில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் இம்முறை தமிழ்ப்பள்ளி தவிர இடை நிலைப்பள்ளி மாணவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இக்குரல் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு ஈடாக இந்த பாடல் திறன் போட்டின் நடைபெறும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் ரொக்கம் உட்பட இதர பரிசுகள் வழங்கப்படும்.

இந்திய மாணவர்கள் பாடல் உட்பட்ச் கலைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

ஆகவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இப்போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதே வேளையில் இப்போட்டிக்கு முழு ஆதரவு வழங்கும் தாஸ்லி நிறுவனம், இந்தியா கேட் நிறுவனம், ஸ்ரீ லட்சுமி நிறுவனம், விஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் உட்பட அனைவருக்கும் எனது நன்றி என்று  ஏகே குமார் கூறினார்.

இப்போட்டி குறித்த மேல்விவரங்களுக்கு ஏகே குமாரை 0167508413  தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset