நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷா ஆலாமில் கடத்தப்பட்ட காரும், 13 வயது சிறுமியும் பாதுகாப்பாக மீட்பு

ஷா ஆலாம்:

ஷா ஆலாமில் கடத்தப்பட்ட காருடன் இருந்த 13 வயது சிறுமி ஒரு மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.

இடைநிலைப் பள்ளி தாமன் ஸ்ரீ மூடா அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி நிற பெரோடுவா விவா காரை சந்தேகநபர் நேற்று மாலை 7 மணியளவில் கடத்திச் சென்றார். அப்போது பின் இருக்கையில் கைப்பேசியுடன் இருந்த சிறுமியும் காரில் இருந்தார். பொதுமக்களின் தகவலையடுத்து, போலீசார் உடனடியாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்தில், டி'ஷெல் உணவகம், பிரிவு 26 உணவகத்திற்கு அருகே காரும், சிறுமியும் மீட்கப்பட்டனர். சிறுமி காயமின்றி இருந்தாலும், சம்பவத்தால் மனஅழுத்தத்தில் இருந்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ராம்சே எம்போல் கூறினார்.

சம்பவத்தின் போது காரின் கண்ணாடிகள் மூடப்ப்பட்டிருந்தது. காரில் அமர விரும்பி தந்தையிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்டு சிறுமி  இன்ஜினை இயக்கிய பின்னரே சம்பவம் நடந்ததாகவும், சிறுமி அலறியதும் காரில் குழந்தை இருப்பதை அறிந்த சந்தேகநபர் வன்முறை மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்கச் சொல்லியதாகவும் போலீஸ் தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அஹ்மத் மொஹ்சின் அப்துல் ரஹ்மானை 011-1755 4394 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset