நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய புதிய இடம் தயாராக உள்ளது: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

தலைநகர் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய புதிய இடம்  இப்போது தயாராக உள்ளது.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.

மடானி பள்ளிவாசல் திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட ஆலயம் மாற்றும் செயல்முறை சட்டத்தின் அடிப்படையில் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இதை முறையாக செயல்படுத்தி வருகிறது.

அனைத்து தரப்பினரின் மத நடைமுறைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஆலயத்தை மாற்றுவதற்கான புதிய இடத்தை அரசாங்கம் ஒதுக்கியது.

மேலும் தொடர்புடைய அனைத்து ஒப்புதல்களையும் நிறைவு செய்வதை விரைவுபடுத்தியுள்ளது.

2025 செப்டம்பர் 17ஆம் தேதி டிபிகேஎல் வாயிலாக ஆலயத்திற்கு அனைத்து கட்டிடத் திட்ட ஒப்புதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

2025 டிசம்பர் 5ஆம் தேதி  புதிய ஆலயத்திற்கான இடம் கெசட் செய்யப்பட்டது.

2026 ஜனவரி 14ஆம் தேதி சம்பந்தப்பட்ட நிலத்தில் ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேச நிலப்பணிகள் குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

அதனுடன், அரசாங்கம் ஆலயம் இடமாற்றத்தை செயல்பாட்டு மட்டத்தில் செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கிறது.

இது அனைத்து நிறுவனங்கள்,  தொடர்புடைய தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு கூட்டத்தின் மூலம் இடமாற்றம், கட்டுமானத்தின் படிகள், ஒருங்கிணைக்கப்படுகிறது.

மேலும் செயல்படுத்தல் ஒழுங்கான முறையில், பரஸ்பர மரியாதையுடன் நடைபெறுவதை உறுதி செய்யப்படும்.

குறிப்பாக தைப்பூச விழாவிற்குப் பிறகு, அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் நெருக்கமான கலந்துரையாடல்களை தொடர்ந்து நடத்தும்.

இந்த ஆலயத்திற்கு ஒரு புதிய இடத்தை வெற்றிகரமாக கிடைப்பதற்கு முயற்சித்த முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா,  கோலாலம்பூரின் முன்னாள் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா ஷெரிப் ஆகியோருக்கு நன்றி.

மேலும் கோலாலம்பூரில் நல்லிணக்கத்திற்காக எனக்கு உதவுவதில் கூட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக அமைச்சர்கள் கோபிந்த் சிங் தியோ, டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மஇகா தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்.

இந்த அணுகுமுறை வேறுபாடுகளை முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் நிர்வகிப்பதில் அனைவரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதை பிரதிபலிக்கிறது என்று ஹன்னா இயோ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset