நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் இரு ஆலயங்களுக்கான நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பிறந்தது: சிவநேசன்

ஈப்போ:

பேரா மாநிலத்தில அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள மேலும் இரு ஆலய நில விவகாரங்களுக்கு தீரவு பிறந்துள்ளது.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.

ஈப்போ கம்போங சீமி எனும் இடத்தில் தாமான பிந்தாங் பாலும், தாமான் மிரின்டியில் உள்ள அருள் மிகு கன துர்கை அம்மன் ஆலயம், ஈப்போ தாமான் மாணிக்கவசகம் குடியிருப்பில் உள்ள மதுரை வீரன் ஆலயம் பல ஆண்டுகள் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலையில் மாநில அரசாஙக செயலகத்தில் மாநில நில அலுவலகம் மற்றும் ஆலய பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் இந்த விவகாரத்திற்கு தீர்வு பிறந்துள்ளது என்று மாநில இந்தியர் விவகாரங்களுக்கான தலைவருமான அவர் தெரிவித்தார்.

மாநில அரசாங்க நிலங்களில் கட்டபட்டுள்ள ஆலயங்களை அகற்ற நில அலுவலம் நடவடிக்கையை மேற்கொண்டது.

இம்மாநிலத்தில் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்ட ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீ்ர்வுக் கண்டுள்ளதை அவர் நினைவுக் கூர்ந்தார்..

பேரா மாநிலத்தில் ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரசசனைகளுக்கு படிபடியாக தீர்வுக்காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் பேசிய அவர் அடுத்தமாதம் தைப்பூச விழா நடபெறவிருக்கிறது. அவைகள் சிறப்பான முறையில் நடைபெற மாநில அரசாங்கம் முழு ஒத்திழைப்பை வழங்கும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset