நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கினாபத்தாங்கானில்  நடந்த கொடூரம்: செம்பனைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை

கினாபத்தாங்கான்:

பச்சிளம் ஆண் குழந்தை, கினாபத்தாங்கான் செம்பனைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தை எடை 2.4 கிலோ கிராம் ஆகும். அந்த குழந்தை பிறந்து 3 அல்லது 4 நாட்களே ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தோட்ட பணியாளர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது குழந்தை அழுவதைக் கண்டு மேலாளர் குழுவுக்கு தகவல் வழங்கினார்.

கினாபத்தாங்கான் மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் டி. ரவி கூறியதாவது, சம்பவம் தொடர்பான புகார் மாலை 7.27 மணிக்கு கிடைத்தது. குழந்தை பின்னர் கினாபத்தாங்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

“குழந்தை ஆரோக்கியமாக உள்ளாது. காயம் எதுவும் இல்லை. தற்போது மருத்துவமனை, சமூக நலத்துறை (JKM) கண்காணிப்பில் உள்ளாது,” என்று ரவி தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் சிசிடிவி இல்லாததும், இதுவரை எந்த சாட்சியும் இல்லை எனவும் கூறப்பட்டது.

சம்பவம், குற்றச் சட்டம் பிரிவு 317-இன் அடிப்படையில் விசாரணை செய்யப்படுகிறது. இந்த குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், போலிசை 089-561890 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset