நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தோமி தோமஸ் வழக்கின் தீர்வு நஜிப்பிற்கு கிடைத்த வெற்றி: ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர்:

முன்னாள் தலைமை வழக்கறிஞர் தோமி தோமஸ் மீதான அவதூறு வழக்கின் தீர்வு, அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் இருந்து தனது பெயரை நீக்குவதில் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

நஜிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

இன்று எட்டப்பட்ட ஒப்பந்தம், மங்கோலியப் பெண்ணின் கொலையில் முன்னாள் பிரதமரை தொடர்புபடுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

பிரதிவாதி (தோமஸ்) ஒப்புக்கொண்டது போல், எந்த ஆதாரமும் இல்லாததால் இதை ஒரு வெற்றி என்று நீங்கள் அழைக்கலாம்.

இது நஜிப்பைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கும் காஃபி கடை பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset