நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்டார் ட்யூட்டர் ஏற்பாட்டில் 350 மாணவர்களுக்கு சிறப்பு செய்த ஸ்டார் விருது விழா 

ஷா ஆலம்:

மிட்லண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் ஸ்டார் ட்யூட்டர் ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஸ்டார் விருத்தளிப்பு நிகழ்ச்சி சேகு ஆனந்த்ராஜ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களின் வருகையால் மாலை 6.00 மணி முதலே நிகழ்ச்சி களை காட்டியது. 

நான்காம் வகுப்பில் இருந்து படிவம் 5 வரை உள்ள மாணவர்கள் தங்களிடம் கற்பதாக ஸ்டார் ட்யூட்டர் தோற்றுனரும் இயக்குனருமான சேகு ஆனந்த்ராஜ் கூறினார்.

இதுவரை தங்களிடம் 12000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களிடம் கற்றுள்ளனர் என்று கூறிய ஆனந்த்ராஜ் கடந்த ஆண்டு மட்டும் 33 மாணவர்கள் முழு அடைவுநிலையை எஸ் பி எம் தேர்வில் பெற்றனர். இந்த ஆண்டு 2026இல் அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று அவர் கூறினார். 

தங்களிடம் ஒவ்வொரு படத்திற்கும் சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் கூறினார். 

எங்களது 4 ஆண்டு கால கல்விப்பயணத்தில் முதன்முறையாக இந்த ஸ்டார் விருதளிப்பு நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்கு ஊக்கத்தை வழங்கி இருக்கிறோம். இதனால் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தின் அங்கீகாரத்தை பெரிதும் வரவேற்றுள்ளனர். உள்ளபடியே எங்கள் ஸ்டார் ட்யூட்டர் நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக ஆற்றலுடன் உத்வேகத்துடன் நாங்கள் இந்திய மாணவர்களுக்கு போதிப்போம் என்று அவர் கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset