
செய்திகள் மலேசியா
15ஆவது பொதுத்தேர்தல் சமூக ஊடகங்களில் நடக்கும் போர்: லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்:
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலானது சமூக ஊடகங்களில் நடக்கும் போர் போன்று இருக்கும் என்கிறார் மூத்த அரசியல் தலைவர் லிம் கிட் சியாங்.
அண்மையில் பிலிப்ஃபீன்சில் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஃபெர்டினான்ட் மார்கோசின் Ferdinand Marcos மகன் ஜூனியர் மார்கோஸ் வெற்றி பெற்றார். இது சமூக ஊடகங்களின் தவறான தகவல்கள், இணையப் பொய்களுக்கு கிடைத்துள்ள வெற்றி என்றும் மலேசியர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
"பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். ஏனெனில் இது சமூக ஊடகப் போராக அமைந்திருக்கும். 1980களில் பிலிப்ஃபீனசில் அரங்கேறிய சர்வாதிகாரமும் ஊழலும் இப்போது பொற்காலம் என்றும் அமைதி மற்றும் வளத்துக்கான காலக்கட்டம் என்றும் சமூக ஊடகங்களின் தவறான தகவல்களும் இணையப் பொய்களும் சித்திரிக்கப்படுகின்றன.
"அப்போது 70 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு, 34 பேர் கொடுமைப்படுத்தப்பட்டு, மூவாயிரம் பேர் கொல்லப்பட்டு, பத்து பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
"கடந்த பத்தாண்டுகளில் மலேசியாவில் நடைபெற்ற ஊழல்களை சமூக ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்களும் பொய்ச் செய்திகளும் மறைக்கப்படக்கூடும். ஏற்கெனவே அதுபோன்ற பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன," என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:03 pm
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கோழி ஏற்றுமதிக்கு தடை: பிரதமர் அறிவிப்பு
May 23, 2022, 12:45 pm
பெர்லிஸ் மாநிலத்தில் பாஸ் இல்லாமல் தனியாக போட்டியிட அம்னோ, தே.மு. தயார்
May 23, 2022, 11:38 am
தாயும், மகனும் தூக்கிலிட்டு மாண்டனர்: ரவாங் குண்டாங்கில் சம்பவம்
May 23, 2022, 11:12 am
கோவிட்-19 தொற்றுக்கு இரண்டு பேர் பலி
May 23, 2022, 11:11 am
கோவிட்-19 தொற்றுக்கு 1,817 பேர் பாதிப்பு
May 23, 2022, 10:18 am
மக்கள் விரும்பினால் தேர்தல் களம் காண்பேன்: ஸுல்கிஃப்ளி அஹ்மத்
May 23, 2022, 9:49 am
மூவாரைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு
May 23, 2022, 9:40 am
உலக நாடுகள் மலேசியா மீது நம்பிக்கை இழந்துவிட்டன: அன்வார் குற்றச்சாட்டு
May 23, 2022, 9:28 am