செய்திகள் மலேசியா
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
கோத்தா கினபாலு:
உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் மீறி, ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற நிலை தொடரும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை மக்களுக்கு மலிவான எரிபொருள் விலையை தொடர்ந்து வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அரசின் மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த விலை, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் பொருளாதார சுமையை இலகுவாக்குவதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
உலகளாவிய நிலைமைகள் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்ந்தாலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலையை நிலைநிறுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அரசு எரிபொருள் மானியத்தை இலக்கு அடிப்படையில் வழங்கும் திட்டத்தையும் தொடர்ச்சியாக செயல்படுத்தி வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு க்க்மட்டுமே இந்த மானியத்தின் முழு பயன் கிடைக்கப் பெறும்.
இந்த முடிவு, எரிபொருள் எசெலவால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தொழில்துறைக்கு தற்காலிக நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
"நோன்புப் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்": பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவிப்பு
March 15, 2026, 1:43 pm
தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும்: மோகன் ராஜ், சரஸ்வதி
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:31 pm
