நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது

கோலாலம்பூர்: 

புத்ராஜெயா பாதையில் இயங்கும் எம்.ஆர்.டி சேவையில் மூன்று நாட்கள் தடங்கல் ஏற்பட்ட கம்பி திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

பொது போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதன் பாதுகாப்பு காவல்துறை பிரிவும், சிலாங்கூர் மாநில காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் என கூறப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி ஸ்ரீ டாமன்சாரா மேற்கு நிலையம் அருகே கம்பிகள் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திருட்டு காரணமாக புத்ராஜெயா எம்.ஆர்.டி பாதை சேவை மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். 

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்பு, தகவல் பகிர்வு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset