செய்திகள் மலேசியா
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
கோலாலம்பூர்:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டு திட்டங்களுடன் தொடர்புடைய 1,459 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளில் மொத்தமாக சுமார் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருப்பினும் மொத்த நிதி இழப்பு அளவு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் முதலீடு செய்யும் முன்பாக நிறுவனங்களைக் குறித்து முழுமையாக ஆராய வேண்டும் என்றும், உறுதிப்படுத்த முடியாத தனிநபர் அல்லது நிறுவன வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விரைவில் அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளையும், அழுத்தம் கொடுத்து முதலீடு செய்யத் தூண்டு முதலீட்டுகளையும் மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
முதலீட்டு நிறுவனங்கள் உரிய நிதி அதிகாரிகளின் அனுமதி பெற்றுள்ளனவா என்பதை சரிபார்ப்பது மிகவும் முக்கியம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
