நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"நோன்புப் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்": பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா: 

ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசியர்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 

இந்த விடுமுறை, ஹரிராயா எந்த நாளில் கொண்டாடப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

ஹரிராயா மார்ச் 20 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டால், மார்ச் 23 திங்கட்கிழமை கூடுதல் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும். இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்கும். 

அதே நேரத்தில், ஹரிராயா மார்ச் 21 சனிக்கிழமை அன்று ஏற்பட்டால், மார்ச் 20 வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட உதவுவதற்காக இந்த அறிவிப்பு முன்பே வெளியிடப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். 

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset