நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இறையச்சம் - தக்வா என்பது எது? - மௌலானா மௌதூதி (ரஹ்) - வெள்ளிச் சிந்தனை

தக்வா குறித்து பேசுவதற்கு முன்பு முதலில் தக்வா - இறையச்சம் என்பது என்ன என்பதை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு முயலுங்கள். 

ஒரு குறிப்பிட்ட ஆடையை, உடை பாணியை மேற்கொள்வது தக்வா அல்ல. குறிப்பிட்ட சமூக வழிமுறையை மேற்கொள்வதும் தக்வா கிடையாது. 

அதற்கு மாறாக இறைவனைப் பற்றிய அச்சமும், இறைப்பற்றும், இறைவனிடம் பதில் அளிக்க வேண்டுமே என்கிற பொறுப்பு உணர்வும் மனத்தை நிறைத்திருக்கும்போது உருவாகி, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற மனநிலைக்குப் பெயர்தான் தக்வா. 

மனிதனின் மனத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் இருப்பதும், தான் இறைவனின் அடிமையாய் அவனுக்கு அடிபணிந்தும் கீழ்ப்படிந்தும் வாழ வேண்டியவராய் இருக்கின்றோம் என்கிற உணர்வு பசுமையாய் நிறைந்திருப்பதும், இறைவனுக்கு முன்னால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம் என்கிற பொறுப்பு உணர்வும் மனத்தை எந்நேரமும் ஆக்கிரமித்திருப்பதும்தாம் உண்மையான இறையச்சம் - தக்வா ஆகும். 

இந்த உலகம் ஒரு தேர்வுக்கூடம் என்றும் இந்த உலகில் தீர்மானிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட  வாழ்நாள் என்கிற கால அவகாசத்தை இறைவன் எனக்கு வழங்கியிருக்கின்றான் என்றும், எனக்கு வழங்கப்பட்ட இந்தக் குறுகிய காலகட்டத்தில் உலகம் என்கிற இந்தத் தேர்வுக்கூடத்தில் என்னுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் எப்படிப் பயன்படுத்துகின்றேன், எந்த நோக்கங்களுக்காக அவற்றைச் செலவிடுகின்றேன் என்பதைப் பொருத்தும், 

இறைவனின் நாட்டத்தினாலும் அவனுடைய திட்டத்தின் அடிப்படையிலும் எனக்குத் தரப்பட்டிருக்கின்ற வசதி வாய்ப்புகளையும், வளங்களையும் எப்படிப் பயன்படுத்துகின்றேன் என்பதைப் பொருத்தும்,

இறைவனின் தீர்ப்பின் படி பல்வேறு உறவுகளின் வடிவிலும் தொடர்புகளின் வாயிலாகவும் இந்த வாழ்நாளில் என்னுடன் பிணைக்கப்பட்டுள்ள பல்வேறு தகுதிநிலைகளைக் கொண்ட பல்வகை மனிதர்களுடன் நான் எப்படி நடந்துகொள்கின்றேன் என்பதைப் பொருத்தும்தாம் மறுமையில் என்னுடைய எதிர்காலத்துக்கான தீர்ப்பு எழுதப்படும் என்கிற எண்ணத்தெளிவு எந்நேரமும் மனத்தில் நிறைந்திருப்பதற்குப் பெயர்தான் தக்வா.

இந்த உணர்வும் எண்ணத் தெளிவும் ஒருவரிடம் மலரும் போது அவருடைய மனசாட்சி விழித்துக்கொள்கின்றது. அவருடைய மார்க்க உணர்வோ கூர்மையடைந்துவிடுகிறது.  இறைவனின் விருப்பத்துக்கு மாற்றமான யாதொன்றும் அவரை உறுத்தத் தொடங்கிவிடுகின்றது. 

இறைவனின் விருப்பத்துக்கு நேர்மாறான எந்தவொரு பொருளையும் அவருடைய இயல்பு ஏற்பதில்லை; அருவருப்புடன் அதனை ஒதுக்கித்தள்ளிவிடுகின்றது.

அவர் எந்நேரமும் தம்மைத்தாமே ஆய்வுசெய்யத்தொடங்கிவிடுகின்றார். மனத்துக்குள் எத்தகைய ஆசைகளும் ஏக்கங்களும் விழைவுகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன என விழிப்புடன் கண்காணிக்கத் தொடங்கிவிடுகின்றார். 

- மௌலானா அபுல் அஃலா மௌதூதி(ரஹ்)

தொடர்புடைய செய்திகள்

+ - reset