
செய்திகள் சிந்தனைகள்
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள். உலகம் முழுக்க இஸ்லாம் தழைத்தோங்க அன்று அந்த யுத்த களத்தில் வெறும் 313 தோழர்களுடன் பத்ரில் பெற்ற வெற்றியின் மீதுதான் முஸ்லிம்கள் வெற்றிக் கொடியை நாட்டினார்கள். மிகச் சிறிய இந்தக் கூட்டத்திற்கு மாபெரும் வெற்றியை இறைவன் வழங்கினான். அந்த மாபெரும் வெற்றியில், அந்த பத்ர் யுத்தத்தில் மனிதர்களுடன் மலக்குமார்களும் கலந்து கொண்டார்கள்.
யுத்தம் செய்வதற்கோ, எதிரிகளை வெட்டி வீழ்த்தேவதற்கோ, முஸ்லிம்களுக்கு வெற்றி பெற்றுக் கொடுப்பதற்கோ அவர்கள் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த வேலைகள் அனைத்தும் ஸஹாபாக்களின் கரங்களாலேயே இடம்பெற்றன.
முழுக்க முழுக்க போராட்டத்தை திட்டமிட்டு, போராடி, காயப்பட்டு, உயிர்களை இழந்து யுத்தத்தின் வெற்றிக்காக உழைத்தவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களுமே!
பிறகு, மலக்குமார்கள் ஏன் வந்தார்கள்?!
போராடுகின்ற முஃமின்களின் உள்ளங்களில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று முஃமின்களுக்கு சுபசோனம் சொல்லி முஃமின்களிடமிருந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதற்காகவும், தொடர்ந்தேர்ச்சையான நெருக்குதல்களால் சோர்வடைந்திருந்த உள்ளங்களுக்கு உந்துதலளிப்பதற்காகவும், ஆறுதலளித்து மனதை தேற்றுவதற்காகவும் தான் மலக்குமார்கள் இறங்கினார்கள்.
இந்தச் செய்தியை ஸுரா அன்ஃபாலில் (9,10 ஆயத்துக்கள்) அல்குர்ஆன் தெளிவாகவே சொல்கிறது. பெரும்பாலான தஃப்ஸீர் ஆசிரியர்களும் இக் கருத்தை வலியுறுத்துகின்றனர்.
இறை உதவியின் இயல்பும் இதுதான். மனிதர்கள் தான் தமது மார்க்கத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். தம்மால் முடிந்த சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தக்வாவை அணிகலனாக கொள்ள வேண்டும்.
கடைசியாக, அல்லாஹ் ஏதோவொரு விதத்தில் எமக்கு உதவி செய்வான். மலக்குமாரை இறக்குவான்; பலம் குன்றி இருப்பினும் எதிரிகளின் கண்களுக்கு நமது பலத்தை பெரிதாக காண்பிப்பான்; எதிரிகளைப் பற்றிய பயத்தை எமது உள்ளங்களில் இருந்து அகற்றி விடுவான். இதுவெல்லாம் இறை உதவியின் வடிவங்கள் என குறித்த ஸூரா பிரஸ்தாபிக்கிறது.
இது பற்றி உஸ்தாத் அக்ரம் கஸ்ஸாப் பின்வருமாறு விளக்குவார்.
"ஆகுக..என்றவுடன் ஆகிவிடும்" (كن فيكون) என்ற ஒற்றை வார்த்தையில் அல்லாஹ்வின் மார்க்கம் பூமியில் தொழிற்படாது.
"மாறாக, மனிதர்கள் தமது மொத்த பலத்தையும் பிரயோகிக்க வேண்டும். முயற்சிகளின் எல்லையை தொடவேண்டும். அப்போது "குன் ஃபயகூன்" தொழிற்பட துவங்கும்.
இச் சந்தர்ப்பத்தில் எதிரிகளின் பலம் ஓங்கி இருந்தாலும் பரவாயில்லை. இறை நாட்டத்தால் அதனை மிகைத்து விடலாம்.
முயற்சி செய்யாத சோம்பேறிகளுக்கும், இயலாமையால் போலி தவக்குல் வைத்திருப்போருக்கும் இறை உதவி கிடைக்காது.
வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தையும் ஒன்று திரட்டி மார்க்கத்தை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்ட மனிதர்களின் உதவியுடன் தான் இறைவனின் உதவி தலையீடு செய்யும். இதுவே, இறை நியதியாகும்"
பத்ர் போராட்டம்; இந்த உம்மத்தின், சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்புணர்வினதும் ஆன்ம பலத்தினதும் அடையாளமாகும்.
இன்று பத்ருக் களத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை இதுதான்.
- ஃபிர்னாஸ்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am