நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை

மனசே சரியில்லை என நீ எழுதி இருந்தாய். அதற்கு அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?

நேர்வழியிலிருந்து தடம் புரண்டு தடுமாறி திசை மாறிப் போனதுதான்.

இஸ்லாத்தின் புரட்சிகரமான, எல்லாவற்றையும் தழுவிய கண்ணோட்டத்தை விட்டு விட்டு நிம்மதி அளிக்கும் மூலை கிடைத்தால் போதும்; காலமெல்லாம் நிம்மதியாக ஒடுங்கிக் கிடந்து விடலாம் என்று நீர் நினைப்பது போலத் தோன்றுகிறது. 

ஆனால் ஒன்றை மறந்து விடக் கூடாது. 

அசத்திய அமைப்புக்கு உட்பட்டு செயல்படுகிற நம்பிக்கையாளனுக்கு நிம்மதி அளிக்கிற இடம் எதுவுமே கிடைக்காது. 

நிச்சயமாகக் கிடைக்காது.

நிம்மதி எங்கு இருக்கிறது தெரியுமா? 

நிம்மதி, இறைவனை நினைவு கூர்வதில் இருக்கிறது. 

நிம்மதி, இறைவாக்கை மேலோங்கச் செய்வதற்கான போராட்டத்தில் ஓயாமல் ஈடுபடுவதில் இருக்கிறது. 

நிம்மதி, அவனுடைய மார்க்கத்தை நிலைநாட்டு வதற்காக பாடுபடும் போது எதிர்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிற உறுதியில் இருக்கிறது.

எழுதி வைத்துக் கொள். 

வேறு எதுவொன்றிலும் நிம்மதி கிடைக்காது.

நிம்மதி இமாம் ஹுஸைனுக்குத் தான் கிடைத்ததே தவிர, இப்னு ஜியாதுக்குக் கடைசி வரை கிட்டவில்லை. 

அஹ்மத் இப்னு ஹம்பலுக்கு நிம்மதி கிடைத்தது; மாமூனுக்குக் கிடைக்கவில்லை.
 
முஜத்தித் அல்ஃபே ஸானி (ரஹ்)க்குக் கிடைத் தது; ஜஹாங்கீருக்குக் கிடைக்கவில்லை. 

அய்யாஷ் ஃபாரூக்குக்கு நிம்மதி கிடைத்ததா? இல்லை. இல்லவேயில்லை. ஹஸனுல் பன்னா ஷஹீதுக்குத்தான் நிம்மதி கிடைத்தது.

அட, யாருக்கு நிம்மதி கிட்டியது என்பதை என்னிடம் கேட்காதே. 

முஸ்லிம் சமுதாயத்தின் வரலாறைக் கேள்.

பொன்னும் பொருளும் பகட்டும் ஜொலிக்கிற பாதைகளில் நிம்மதியைத் தேடி அலையாதே.

உலகப் பொருட்களும் வளங்களும் அங்கு அளவின்றிக் கொட்டிக் கிடக்கலாம்; ஆனால் அங்குக் கிடைக்காத ஒரே ஒரு பொருள் உண்டு. 

அதுதான் மனநிம்மதி. 

அல்லாஹ் உனக்கு உண்மையான மனநிம்மதி வழங்குவானாக...! 

- மௌலானா அஸத் கீலானி

தொடர்புடைய செய்திகள்

+ - reset