நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை

பொதுவாக நாம் நம்முடைய தேவைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையே நம்முடைய தேவைகளையும் பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் சுற்றியே அமைந்துவிடுகின்றது.

நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே நம்முடைய ஆர்வங்களையும் அக்கறைகளையும் குவித்து வைக்கின்றோம்.

எந்நேரமும் நம்முடைய நலன்கள், நம்முடைய வாழ்க்கை, நம்முடைய தேவைகள் குறித்தே அதிகமாகக் கவலைப்படுகின்றோம்.

இது நபி வழி அல்ல.

டெலிபோனை  கண்டுபிடித்தவர்தான் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்.

ஆனால் அவருக்கு உண்மையில் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு அவசரமோ, அவசியமோ, தேவையோ இருக்கவில்லை.  

அவருடைய வீட்டில் இருந்தவர்கள் இரண்டே பேர்தான். மனைவியும் தாயும். மனைவிக்கோ பேச்சுத்திறனே இல்லை. தாயாரோ செவிப்புலமையை இழந்து விட்டவர்கள்.

எனவே மக்களுடன் உரையாடுவதற்கு உதவுகின்ற கருவியைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்கிற அவசரத் தேவை அவருக்கு இருக்கவில்லை. தொலைபேசியைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு எந்த ஆதாயமும் இருக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறைகூட தன்னுடைய குடும்பத்தாருடன் தொலைபேசி வழியாக உரையாடியதே இல்லை.

என்றாலும் இப்படிப்பட்ட கருவி ஒன்றால் மக்கள் பயன் பெறுவார்கள் என்கிற பொதுநல ஆசைதான் அவரை உந்தித் தள்ளியது. உழைத்தார். பாடுபட்டார். தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.

அலெக்சாண்டரின் உழைப்பால் இன்று உலகமே தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டிருக்கின்றது. இன்று வரை அந்த அருமையான கண்டுபிடிப்பின் மூலமாக பயனீட்டிக் கொண்டே இருக்கின்றது.

பிற மனிதர்களின் தேவைகளை உணர்பவர்களால்தான் இந்த உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்க முடியும்.

இஸ்லாம் இத்தகைய பொதுநல மனப்பான்மையைத்தான் ஊக்குவிக்கின்றது.

தனக்காக மட்டுமே வாழ்ந்தால் பிறருக்கு கொடுப்பதற்கு நம்மிடம் என்னதான் இருக்கும்?

பிறரின் தேவைகளை உணர்பவர்களால், பிறரின் நலன்கள் குறித்து கவலைப்படுபவர்களால் மட்டுமே இந்த உலகத்திற்கு வெளிச்சம் கொண்டு வர முடியும்.

பிறரின் தேவைகளை, நலன்களைக் கருத்தில் கொண்டு இயங்க வேண்டும் என்று வலியுறுத்திகிறது இஸ்லாம்.

மனிதர்களுக்கு நன்மைகள் அளிப்பவர்தாம் இறைவனின் பார்வையில் சிறந்தவர் என்றே நபிகள் நாயகம் கூறினார்கள்.

தனக்காக மட்டுமே வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள்தாம் சிறந்த மனிதர்கள் என்று இஸ்லாம் கொண்டாடுகின்றது. 

இந்த நபிவழியின் படி நாம் இன்று நடக்கின்றோமா? 

சிந்திக்க வேண்டிய விஷயம் இதுவே.

- முஹம்மத் குன்ஹி

கன்னடத்திலிருந்து தமிழில் : ஜொஹ்ரா சுல்தான்

தொடர்புடைய செய்திகள்

+ - reset