நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?

அம்பானி வீட்டுத் திருமணம் என்பதாக நடந்தவை எல்லாம் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களாம்! அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை மாதம் தான் நடைபெற போகிறது! 

தற்போதைய நிகழ்வே இப்படி ஆயிரம் கோடிக்கு மேல் செலவில் அசத்துகிறது என்றால், திருமண செலவுகள் படு ஆடம்பரமாகத் தான் இருக்கும் சந்தேகமில்லை.

நாளொன்றுக்கு ஆறு விமானங்களே நிற்கக் கூடிய சிறிய நகரமான குஜராத்தின் ஜாம்நகரில் சர்வதேச விமானங்கள் இறங்க முடியாது என்பதால் 140 விமானங்கள் இறங்கத்தக்க அளவுக்கு அதிரடியாக சர்வதேச விமான நிலையமாக்கிவிட்டது பாஜக அரசு!
 
பல அரசுத் துறை அதிகாரிகளும் அம்பானி வீட்டுத் திருமணத்திற்காக ஆளாய்ப் பறந்து வேலை பார்த்துள்ளது அவலம்!

உச்சபட்ச ஆடம்பரங்கள் என்பவை ஒரு வகையில் அச்சப்பட வேண்டிய பாவகரமான செயலாகும்.

இப்படிப்பட்ட பெருமுதலாளிகள் வீட்டுத் திருமணத்திற்கு சென்று அட்டனன்ஸ் போட்டு வரும் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலதரப்பட்ட பிரபலங்களின் தராதரம் இவ்வளவு தான்…!

இது ஒரு தனி நபர் வீட்டுத் திருமணம் மட்டுமாக நினைத்து கடந்து போகக் கூடியதல்ல, ஊடகங்கள் தரும் முக்கியத்தால் இதன் தாக்கம் பல சிறிய, பெரிய தொழில் அதிபர்களுக்கும் இது போன்ற செலவுகள் செய்ய உந்துதல்களைத் தரும். ஆகவே, இன்னும் உழைப்புச் சுரண்டலும், பல கோடி முறைகேடுகளும் அதிகரிக்கும்.

ரஜினிகாந்த்  ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் குறித்து, “அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது. வைகுண்டம், கைலாசாவை இந்த உலகத்திற்கு எடுத்து வந்தார்களோ என்று தோன்றியது. அம்பானி இந்தியாவின் பெருமை. ..’’ எனப் பேசி இருப்பதை அறியாமை என்று கடக்க முயன்றாலும், அருவெறுப்பாக உள்ளது.

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset