நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இன்று 30.3.24 அனைத்துலக பூஜ்ஜிய கழிவு தினம்

பினாங்கு:

சர்வதேச பூஜ்ஜிய கழிவு தினத்தில் ஒவ்வொருவரும் குப்பை கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இந்த சர்வதேச பூஜ்ஜிய கழிவு தினத்தில் ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தால் உலகம் இந்த கழிவு மண்டலத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளமுடியும் என முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

மார்ச் 30 அன்று,  பூஜ்ஜிய கழிவுகளுக்கான சர்வதேச தினத்துடன் இணைந்து, பினாங்கின் பயனீட்டாளர் சங்கம் பூஜ்ஜிய கழிவுக்கான பாதையை அனைவரும் தழுவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியில் வேரூன்றிய பூஜ்ஜிய-கழிவு அணுகுமுறை காலநிலை உமிழ்வைக் குறைப்பதற்கும், நெகிழ்வான உள்ளூர் பொருளாதாரங்களை உருவாக்குவதற்கும் சமூக நல்வாழ்வை அதிகரிப்பதற்கும் ஒரு மலிவான, பயனுள்ள வழியாகும் என்றார் அவர்.

கழிவு மேலாண்மை நிலையான பயனீடு, உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசர தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சர்வதேச பூஜ்ஜிய கழிவு தினத்தின் குறிக்கோள்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரத்திலிருந்து பூஜ்ஜிய கழிவு முன்னுதாரணத்திற்கு மாறுவதற்கு, கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதை முதலில் தடுக்க வேண்டும்.

 இது நமது நேரியல் பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் பயனீடு முறைகள் இரண்டையும் இலக்காகக் கொண்டது.

கடைகளுக்கு செல்லும்போது உங்கள் சொந்தக் கைப்பைகளை  கொண்டுச் சொல்லுங்கள்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மளிகைப் பொருட்களை வாங்கும் போது துணி, மஞ்சள் பை அல்லது மற்ற நீடித்த பொருட்களால் செய்யப்பட்ட மறுபயன்பாட்டு பைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கோப்பைகளை கொண்டுச் செல்லுங்கள்.

 சாத்தியமான போதெல்லாம்  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

துருப்பிடிக்காத எஃகு ஸ்ட்ராக்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கரண்டி, தண்ணீர் பாட்டில்கள் போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாற்றுகளைத் தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள்.

கிடைக்கும் போதெல்லாம் பேக்கேஜிங் இல்லாத பழங்கள், காய்கறிகள் மற்றும் மொத்த உணவுகள் போன்ற பொருட்களை வாங்குங்கள்.

மீதமுள்ள,சாப்பிட முடியாத  பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகள்,  முட்டை ஓடுகளை குப்பைத் தொட்டியில் வீசுவதற்குப் பதிலாக உரமாக்கத் தொடங்குங்கள். 

பொருட்களை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றைப் பழுதுபார்ப்பதன் மூலம் அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.

கழிவுகளைக் குறைக்க பழைய பொருட்களை புதிய பயன்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தவும்.

 காகிதம், கண்ணாடி, உலோகம், சில நெகிழி  பொருட்களை வரிசைப்படுத்தி மறுசுழற்சி செய்யலாம்.

எப்போதும் உங்களுக்குத் தேவையானதை மட்டும் வாங்குவதன் மூலம் கழிவுகளைக் குறைக்கலாம்.

 நீண்ட காலம் நீடிக்கும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் உயர்தர, நீடித்த தயாரிப்புகளைத் தேர்வு செய்யும்படி மலேசிய பயனீட்டாளர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset