நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை

ரமலான் மாதம் தான் எத்துணை அருள்வளங்கள் நிறைந்த மாதம். அதனுடைய அருள்வளங்கள் கணக்கற்றவை. 

ஆனால் நம்முடைய மனம் தான் எத்துணை குறுகியதாய் இருக்கின்றது. 

நாம் அந்த அருள்வளம் நிறைந்த மாதத்தில் அருள்வளங்கள் அனைத்தையும் புண்ணியம், ஸவாப், நன்மை பற்றிய கணக்குகளின் குறுகிய வட்டத்தில் அடைத்து வைத்துவிடுகின்றோம். இது செய்தால் இத்துணை நன்மை. அதைச் செய்தால் அத்துணை நன்மை. 

நாம் ரமளானின் அருள்வளங்களை இந்த மாதத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு நல்லறத்துக்கும் எழுபது மடங்கு நற்கூலி கிடைக்கும் என்பதோடு நம்முடைய புரிதலை முடித்துக் கொள்கின்றோம். 

இதனால் அதிகமதிகமாக நஃபில் தொழுகின்றோம். பல முறை ஒட்டுமொத்த குர்ஆனையும் ஓதி முடிக்கின்றோம். திக்ரு வாசகங்களால் நாவை நனைத்துக் கொள்கின்றோம். 

பேரார்வத்தோடு இஃப்தார் பார்ட்டிகளை நடத்துகின்றோம். சின்னதா, லேசா, எளிதா என்னென்ன வகையான நல்லறங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கவனத்தோடு செய்து முடிக்கின்றோம். 

இவ்வாறாக இலட்சக்கணக்கில் நன்மைகளையும் புண்ணியங்களையும் நற்கூலிகளையும் அள்ளிக் கொள்வதில் நம்முடைய கவனமும் அக்கறையும் ஆர்வமும் குவிந்துவிடுகின்றன. 

ஆனால் -

ஆனால் இந்த மாதம் வருவதே உங்களையும் என்னையும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குர்ஆனிய வார்ப்பில் வார்த்தெடுப்பதற்காகத்தான் என்பதை மறந்துவிடுகின்றோம். இந்த 
மாதம் வருவதே நம்மை குர்ஆனிய போதனைகளின் அச்சில் வார்த்தெடுப்பதற்காகத்தான். 

இந்த நிலையில் நாம் நம்முடைய வாழ்வை இந்த ரமளான் மாதத்தில் கூட குர்ஆனின் அச்சில் வார்த்தெடுத்துக் கொள்ளவில்லையெனில், நம்முடைய வாழ்வை குர்ஆனின் படி அமைத்துக் கொள்ளவில்லையெனில், ஒன்றுக்கு பத்து முறை முழு குர்ஆனையும் ஓதிமுடிப்பதாலோ, இறைநினைவு வாசகங்களை அதிக அளவில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பதாலோ என்ன பயன் கிடைத்துவிடப் போகின்றது. 

- மௌலானா முஹம்மத் இனாயத்துல்லாஹ் சுப்ஹானி

தொடர்புடைய செய்திகள்

+ - reset