நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை அவசியமானது: ரஷியா

மாஸ்கோ:

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை மிக அவசியமானது என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறினார்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகர் கீவை ரஷிய படைகளால் கைப்பற்ற முடியாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலை ரஷிய படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போரின் 77ஆவது ஆண்டு வெற்றிப் பேரணி மாஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ராணுவ படைகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டு அதிபர் புதின் பேசுகையில், எங்கள் நாட்டு எல்லையில் எழுந்துள்ள அபாயத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனால் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையானது சரியான நேரத்தில் நடத்தப்பட்ட அவசியமான ஒன்றாகும்.

மேற்குலக நாடுகளின் கொள்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணம், பிலோஹோவ்ரிகா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் ரஷிய படைகள் சனிக்கிழமை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

அத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
...

தொடர்புடைய செய்திகள்

+ - reset