செய்திகள் உலகம்
கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டு விசாரணை: அமெரிக்காவின் ஆய்வில் 60 நாடுகளில் மலேசியாவும் இடம்பெற்றது
பெட்டாலிங் ஜெயா:
கட்டாயத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும், அதற்கான கட்டுப்பாடுகளைப் பயனுள்ள வகையில் அமல்படுத்தவும் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) மேற்கொள்ளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 60 நாடுகளில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது.
USTR வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட நாடுகளின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நடைமுறைகள் “அநியாயமானவை அல்லது பாகுபாடானவை” ஆக உள்ளதா, மேலும் அவை அமெரிக்க வர்த்தகத்தைச் சுமையாக்குகிறதா அல்லது கட்டுப்படுத்துகிறதா என்பதைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டாயத் தொழிலாளர் விசாரணை, மலேசியாவைச் சேர்த்து 15 முக்கிய வர்த்தக கூட்டாளிகளின் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தித் திறனைப் பற்றிய வர்த்தக விசாரணைகளை அமெரிக்க நேற்று தொடங்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து வருகிறது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்ததாவது, கட்டாயத் தொழிலாளர் நடைமுறைக்கு எதிராக சர்வதேச அளவில் பரவலான ஒப்புதல் இருந்தபோதிலும், பல அரசுகள் அந்த முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் தங்களது சந்தைகளில் நுழைவதைத் தடுக்கத் தவறியுள்ளதாகக் கூறினார்.
“நீண்ட காலமாக, கட்டாயத் தொழிலாளர் முறையால் கிடைக்கும் செயற்கைச் செலவு முன்னிலை கொண்ட வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் அமெரிக்க தொழிலாளர்கள், நிறுவனங்கள் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், கட்டாயத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்காக வெளிநாட்டு அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பதையும், இந்த பிரச்சினையைச் சமாளிக்கத் தவறியதால் அமெரிக்க தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களையும் இந்த விசாரணை மதிப்பீடு செய்யும் என்று கிரீர் தெரிவித்தார்.
மேலும், ஆய்வுக்கு உட்பட்ட நாடுகளின் அரசுகளுடன் ஆலோசனைகளை நடத்த USTR முன்வரும் என்றும் தெரிவித்துள்ளது. பொதுக் கேள்வி பதில் அமர்வு ஏப்ரல் 28 அன்று நடைபெறவுள்ளது. எழுத்துப் பூர்வமான கருத்துக்கள், கலந்துகொள்ள வேண்டிய கோரிக்கைகளை ஏப்ரல் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
ஈரானின் இணைய தாக்குதலுக்கு பலியான அமெரிக்கா: மருத்துவ நிறுவனத்தின் 50 டெராபைட் தரவுகள் திருட்டு
March 12, 2026, 1:11 pm
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
March 12, 2026, 11:04 am
