செய்திகள் உலகம்
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
கொழும்பு:
ஒன்பது நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கடற்படையின் IRIS Dena என்ற பிரிகேட் கப்பலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள், இலங்கையின் கடற்கரைக்கு அருகே கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
அனைத்து உள்ளூர் நடைமுறைகளும் முடிவடைந்துள்ளன ௭ன்றும் உடல்களைத் திருப்பி அனுப்ப ஈரான் தரப்பு வாடகை விமானத்தை கொண்டு வரும் ௭ன இலங்கை வெளியுறவு அமைச்சக பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ தெரிவித்தார்.
“எங்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 32 கடற்படையினர் இலங்கையிலேயே தங்குவார்கள்,” என்று அவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட நிலையில் மூடப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள உடல்கள், நாட்டின் தெற்கில் உள்ள மட்டலா சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட உள்ளன.
முதல் கட்டமாக 46 உடல்கள் ஏற்கனவே வெள்ளிக்கிழமை பிற்பகலில் விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு, ஈரானிலிருந்து வரும் வாடகை சரக்கு விமானத்திற்காகக் காத்திருக்கின்றன.
இந்த உடல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்ட பின்னர், தலைநகரத்திலிருந்து 115 கிலோமீட்டர் தெற்கில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
அந்த உடல்களை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திடம் ஒப்படைத்து, உறவினர்களிடம் அனுப்புமாறு உள்ளூர் நீதிமன்ற மஜிஸ்ட்ரேட் ஒருவர் உத்தரவிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
