செய்திகள் உலகம்
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
ஜகார்த்தா:
அண்டை நாடான இந்தோனேசியாவில் உள்ள பல முக்கிய எரிமலைகள் கடந்த சில நாட்களாகக் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அந்த நாட்டு அரசு பொதுமக்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை நேற்று காலை பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது. இதிலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகையும் நெருப்புக் குழம்பும் வெளியேறின.
அதேபோல், கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு எரிமலை கடந்த ஒரே வாரத்தில் 32 முறைக்கும் மேலாகச் சீற்றமடைந்துள்ளது. இன்று அதிகாலை மட்டும் இந்த எரிமலை நான்கு முறை வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.
மறுபுறம், மத்திய ஜாவாவில் உள்ள மெராபி எரிமலையிலிருந்து சுமார் 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு லாவா நெருப்பு ஆறாக ஓடுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
எரிமலை வெடிப்பிலிருந்து வெளியேறும் வெப்ப மேகங்கள், சாம்பலால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், எரிமலையைச் சுற்றியுள்ள 13 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் யாரும் நுழைய வேண்டாம் என்று எரிமலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், ஆறுகளில் ஏற்படக்கூடிய திடீர் வெள்ளப்பெருக்கு, லாவா எரிமலைக் ஓட்டம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 1:52 pm
நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஈரான் அறிவிப்பு
May 1, 2026, 3:40 pm
தென் கொரியாவில் கொடூரம்: 8 மாதக் குழந்தையை ரிமோட்டால் அடித்துக் கொன்ற தாய்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
