செய்திகள் உலகம்
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
பீஜிங்:
ஈரானில் போர் தொடர்பான தாக்குதல்களில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society of China) மூலம் ஈரான் செம்மஞ்சள் பிறை சங்கத்திற்கு (Iran Red Crescent Society) 200,000 அமெரிக்க டாலர் அவசர உதவி வழங்கப்படும் ௭ன்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மோதலின் போது தாக்குதல்களில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர் சந்திப்பில், எந்தத் தரப்பைச் சேர்ந்ததாக இருந்தாலும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும் பைஜிங் கண்டிக்கிறது என்று கூறினார்.
மேலும், மோதல் உள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
