செய்திகள் உலகம்
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
மாஸ்கோ:
ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்படும் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மீதான தடைகளை வேறுவழியின்றி அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைவர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 12-ஆம் தேதி வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ள இந்த முடிவின்படி, இந்தியாவில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, தற்போது போக்குவரத்தில் உள்ள சுமார் 10 கோடி பீப்பாய் ரஷ்ய எண்ணெய் மீதான அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக டிமிட்ரிவ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் அதிகரித்து வரும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவின் எரிசக்தி தயாரிப்புகள் மீதான தடைகளைத் தளர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சில தரப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், உலகச் சந்தையின் தேவையைக் கருதி அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரஷ்யாவின் பங்களிப்பு இன்றி உலகளாவிய எரிசக்தி சந்தை நிலையாக இருக்க முடியாது என்பதை இந்தத் தடை நீக்கத்தின் மூலம் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
