நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

472 இடங்களிலும் குடிநீர் விநியோகம் சீரடைந்தது: Air Selangor

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீரென பாதிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம், புதன்கிழமை முழுமையாகச் சீரடைந்தது.

மொத்தம் 472 இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டதாக Air Selangor நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

நோன்புப் பெருநாள் வேளையில் இந்த தண்ணீர் விநியோகத் துண்டிப்பானது, பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பாதிப்பை சீரமைக்க Air Selangor துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டது.

சுங்கை செமினி, புக்கிட் தம்போய் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னறிவிப்பின்றி இவ்விரு நிலையங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், புதன்கிழமை காலையே இவ்விரு சுத்திகரிப்பு நிலையங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

Air Selangor, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடைக்கால ஏற்பாடாக தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகித்து பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்தது.

தற்போதைய நிலைமை குறித்து கூடுதல் விவரங்களை அறிய தனது முகநூல், இன்ஸ்டகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடுமாறு Air Selangor கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset