நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவுக்கான பயணத்தின் போது முதலீட்டாளர்களை பிரதமர் அன்வார் சந்தித்தார்

ஷாங்காய்:

சீனாவுக்கான பயணத்தின் போது முதலீட்டாளர்களை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்.

கசானா நேஷனல்  ஏற்பாடு செய்துள்ள சீன முதலீட்டாளர்களுடனான உரையாடல் நிகழ்வில் பிரதமர் பேசினார்.

இதில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களில் செங்வேய் கேபிடல், என்ஆர்எல் கேபிடல் ஆகியவை அடங்கும்.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய சீனாவுக்கான நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியமான முதலீட்டாளர்களைச் சந்திப்பதாகும் என்று சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முஹம்மத் கூறினார்.

இந்த முறை முழுக்க பொருளாதார விவகாரங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

மலேசியாவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ள நிறுவனங்களுடனான சந்திப்பு உட்பட ஒரு தொடர் அட்டவணை பிரதமருக்குக் காத்திருக்கிறது என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset