நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா

கோலாலம்பூர்: 

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் கடுமையான மழையை உட்படுத்திய ஐந்து முதல் ஏழு சம்பவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இம்மாதம் தொடங்கி வரும் டிசம்பர் வரை கிளந்தான், திரங்கானு, பகாங் ஜோகூர், சரவா மற்றும் சபாவில் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை பகாங், ஜொகூர் சரவா மற்றும் சபாவில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழையின் கடைசிக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதியில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும்.

இதன் காரணமாக கடுமையான வெப்பமும் வறட்சியும் ஏற்பட்டு வெப்ப அலை ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் உருவாக்கும் என அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் பருவமழை காலத்தின் பொது பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்  அதேவேளையில் வானிலை ஆய்வுத் துறையின் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset