நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RON95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானியத்தின் வாயிலாக மாதத்திற்கு சுமார் RM600 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க முடிந்தது: அமீர் ஹம்சா 

கோலாலம்பூர்: 

RON95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானியத்தின் வாயிலாக மாதத்திற்கு சுமார் RM600 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க முடிந்துள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்தார்.  

டீசல் மானியத்தை இலக்காகக் கொண்டதன் மூலம் பெட்ரோல் நிலையங்களுக்கான டீசல் விற்பனையில் 25 சதவீதம் அல்லது ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் லிட்டர்கள் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இந்த விவகாரம் டீசல் கடத்தலின் நடவடிக்கைகளை வெற்றிகரமாகக்  குறைக்கப்பட்டது.

RON95 பெட்ரோல் மானியம் ஆண்டுதோறும் சுமார் RM20 பில்லியன் என்று கருதினால், வெளிநாட்டினர், வணிகத் துறை மற்றும் வசதி படைத்த தனிநபர்களுக்கு கசிவு ஏற்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் RM8 பில்லியன் வரை சேமிக்க முடியும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset