நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஸாவில் தொலைத்தொடர்புகளை மீட்டெடுக்க பாலஸ்தீனத்துடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராகவுள்ளது: ஃபஹ்மி

அன்காரா:

காஸாவில் தொலைத்தொடர்புகளை மீட்டெடுக்க பாலஸ்தீனத்துடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராகவுள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை கூறினார்.

மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு ஃபஹ்மி துருக்கி சென்றுள்ளார்.

இப் பயணத்தின் ஓர் அங்கமாக அவர் நேற்று பாலஸ்தீன தேசியப் பொருளாதார அமைச்சர் முஹம்மது அல் அமூரை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் மலேசியாவுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல்வேறு துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தார்.

குறிப்பாக காஸாவில் தொலைத் தொடர்புகளை மீட்டெடுக்க பாலஸ்தீனத்துடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராக உள்ளது.

மேலும் மலேசியா, பாலஸ்தீனம் ஆகியவை டிஜிட்டல் மாற்றம், இணையம் வாயிலாக பணம் செலுத்துதல், டிஜிட்டல் வங்கிகள்,  இ-வாலட்டுகள் போன்ற பல திட்டங்களை மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்று ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset