நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாயைத் துன்புறுத்திக் கொன்ற இரு ஆடவர்களைக் காவல்துறை தேடுகிறது

கோத்தா கினாபாலு:

சபா கெனிங்காவ் மாவட்டத்தில் நாயைத் துன்புறுத்திக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கார் பழுது பார்க்கும் கடையில் ஒரு இரும்பு கம்பியின் மூலம் எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருந்த ஒரு நாயை ஆடவர் தாக்கும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. 

ஆடவர் தாக்கியத்தில் நாய் இறந்து போனது. 

இந்தச் சம்பவத்தை மற்றொரு நபர் சிரித்தபடி பதிவு செய்து கொண்டிருந்தார்.

இந்தக் காணொலி முகநூலில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கெனிங்காவ் OCPD Suppt Yampil Anak Garai, நாய் கொல்லப்பட்ட வழக்கு குறித்து தங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளதாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset