செய்திகள் மலேசியா
நவம்பர் 15-ஆம் தேதி சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்: அமிருடின் ஷாரி
ஷா ஆலம்:
2025-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
நவம்பர் 15ஆம் தேதி மாலை 3.00 மணிக்குச் சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத் தாக்கல் செய்வதை https://www.facebook. com/ MediaSelangor வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தேவையான பிரத்தியேக முன்னெடுப்புகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக மந்திரி பெசார் கூறியிருந்தார்.
மக்களின் நலனைக் காக்கும் அதேவேளையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மைப் பங்களிப்பாளர் என் பெயரையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நவம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்துடன் இணைந்து வரவு செலவுத் திட்டமும் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் முன்னதாக கூறியிருந்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 5, 2024, 5:23 pm
தேசிய முன்னணி எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பதை நிறுத்தாது: அஹமத் ஜாஹிட் ஹமிடி
November 5, 2024, 4:13 pm
இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
November 5, 2024, 3:47 pm
பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுபடுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் அன்வார்
November 5, 2024, 1:03 pm
எம் எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது: அந்தோனி லோக்
November 5, 2024, 12:50 pm
முதன்முறையாக DATING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: நடுக்காட்டில் தவிக்கவிட்டு சென்ற காதலன்
November 5, 2024, 11:50 am
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கத்தின் விலை சீராக நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ அப்துல் ரசூல்
November 5, 2024, 11:49 am
தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்
November 5, 2024, 11:47 am