நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுபடுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் அன்வார்

ஷாங்காய்:

உலகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சர்வதேச அமைப்பில் ஈடுபடும் மலேசியாவின் முடிவு,  சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் நாட்டின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

ரஷ்யாவின் கசானில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்ச மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ஒரு நாட்டைப் பாதுகாக்கும் பிரிவினை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் சக்திகளை எதிர்கொள்வதற்கு ஒன்றாகப் பகிரப்பட்ட எதிர்கால உணர்வை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளை உலக அமைதி, பாதுகாப்பைப் பேணுமாறு சீனா வலியுறுத்தியது.

எதிர்காலம் என்ற கொள்கை ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் குளோபல் தெற்கில் உள்ள நாடுகளாலும் நன்கு வரவேற்கப்படுகிறது.

அதனால் தான் மலேசியா பிரிக்ஸ் அமைப்பில் சேர ஒப்புக்கொண்டது என்று அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset