நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சரவாக் பாமாயில் துறையில் 45,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறை

கோலாலம்பூர்:

பாமாயில் உற்பத்தி துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவாக் பாமாயில் தோட்டத்துறை முதலாளிமார்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தற்போதைய சூழலில் குறைந்தபட்சம், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அம்மாநிலத்துக்கு தேவைப்படுவதாக அச்சங்கத்தின் தலைமை செயலதிகாரி ஃபெலிக்ஸ் மோஹ் (Felix Moh) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் தருவிப்பதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

"குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது இரண்டு ஆண்டுகளாக திரும்பத்திரும்ப அறிவிக்கப்பட்ட முடக்க நிலைக்குப் பிறகு கூட்டரசு அரசாங்கம் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

"குறைந்தபட்ச ஊதிய நிர்ணயமானது, உள்நாட்டினர் மத்தியில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை ஏற்க ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக உடனடியாக பலன் அளிக்கவில்லை.

"இந்தோனேசிய அரசாங்கம் தன் தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்புவதைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

"இதர துறைகளைப் போலவே நாங்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான விஷயத்தில் தெளிவுபெற முடியாமல் உள்ளோம்.

"சரவாக் பாமாயில் துறையில் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது கடந்த ஆண்டு நிலவரம். அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்கும்," என்கிறார் ஃபெலிக்ஸ் மோஹ்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset