செய்திகள் வணிகம்
இராணுவ நிதியத்தின் வலுவான செயல்திறன்: 5.35% லாபப் பங்கு வழங்கல்
கோலாலம்பூர்:
இராணுவ நிதிய வாரியம் 5.35 சதவீத லாபப் பங்கினை அறிவித்துள்ளது. 2025 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்காக மொத்தம் 524.74 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்த அளவு ஆகும்.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின், இந்த சாதனை மலேசிய ஆயுதப்படை உறுப்பினர்களின் நீண்டகால நிதி நலனை பாதுகாக்கும் வாரியத்தின் உறுதியை வெளிப்படுத்துவதாக கூறினார்.
அந்த நிதியாண்டில் முதலீட்டு வருமானம் 749.49 மில்லியன் ரிங்கிட் ஆகவும், பகிரக்கூடிய இலாபம் 541.56 மில்லியன் ரிங்கிட் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கையிருப்பு தொகை 29.1 சதவீதம் அதிகரித்து 1.31 பில்லியன் ரிங்கிட் ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 1.01 பில்லியன் ரிங்கிட் உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
இந்த அறிவிப்பு தொடர்ந்து நான்காவது ஆண்டாக 5 சதவீதத்திற்கும் அதிகமான லாபப் பங்கு வழங்கப்பட்டதை குறிக்கிறது.
இராணுவ நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி முஹம்மத் அஷ்ரஃப் முஹம்மத் ரட்ஸி, திட்டமிட்ட நிர்வாக மாற்றங்களும் நீண்டகால முதலீட்டு மேலாண்மையும் இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.
மேலும், எதிர்கால வளர்ச்சிக்கும் நிறுவனம் உறுதியான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
