நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரின் இளைய சகோதரர் ரஸ்லி இப்ராஹீம் காலமானார்

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹீமின் இளைய சகோதரர் ரஸ்லி இப்ராஹீம் Rusli Ibrahim காலமானார். அவருக்கு வயது 74.

தமது சகோதரர் காலமான தகவலை பிகேஆர் கட்சித் தலைவருமான அன்வார் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"எனது சகோதரர் அல்லாஹ்வின் அழைப்புக்கு செவிமடுத்துள்ளார். அவரது ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு எனது நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

"இதன் மூலம் எல்லாம்வல்ல இறைவனுக்கு மிகவும் பிரியமானவராக அவர் இருப்பார்," என்று அன்வார் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்லி இப்ராஹீம் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் இயற்கையாக மரணமடைந்தார் எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த பல வாரங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset