நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான செலவை கட்டுப்படுத்தினால்  டோல் கட்டணம் குறையும்: பிரதமர் அன்வார் 

சிரம்பான்:

நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான செலவை கட்டுப்படுத்தினால் டோல் கட்டணம் குறையும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் டோல் சாவடிகளுக்கான கட்டணத்தை குறைக்கலாம். ஆனால் அதற்கு கசிவு ஊழலைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான செலவைக் கட்டுப்படுத்த  வேண்டும்.

மனது வைத்து சரியாக திட்டமிட்டால் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான செலவு உண்மையில் குறைக்கப்படலாம்.

ஆனால் ஒப்புதல் செயல்முறைக்கு வழங்கப்படும் அதிக கட்டணங்கள் காரணமாக இது அதிகரிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். 

பொதுப் பணித்துறை அமைச்சு, மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடுத்த திட்டத்திற்கான நடவடிக்கையை விரைவுபடுத்துவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.

நெடுஞ்சாலைத் திட்டம், மக்கள் திட்டம் என்று அனைவரும் பொறுப்புணர்வுடன் உணர்ந்தால் இது நடக்கும்.

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் சிரம்பான் முதல் நிலையான ஓய்வு மையத்தை திறந்து வைத்த பிரதமர்  இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset