நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் விதிமுறை தொடர்பாக திரெசா கொக்கின் கருத்து: நம்பிக்கை கூட்டணியின் கருத்தாக பிரதிபலிக்கவில்லை: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

ஹலால் சான்றிதழ் விதிமுறை தொடர்பாக செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் கூறிய கருத்தானது நம்பிக்கை கூட்டணியைப் பிரதிபலிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

திரேசா கோக்கின் சர்ச்சைக்குரிய கருத்தானது தேவையில்லாத சூழலையும் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியையும் கொண்டு வரும் என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

அவர் தெரிவிக்கக்கூடிய கருத்து முறையாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் குழப்பம் எதுவும் ஏற்படாது என்று நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் சொன்னார். 

முன்னதாக, மது, பன்றி வகை உணவுவகைகளை பரிமாறும் அல்லது விற்கும் கடைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படக்கூடாத என்று வெளிவந்த தகவலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக அவர் கருத்து பதிவிட்டிருந்தார். 

அவரின் சர்ச்சைக்குரிய பதிவு நம்பிக்கை கூட்டணி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

- தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset