நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவையற்ற விஷயங்களைப் பேசி யாரும் நாட்டில் சர்ச்சையை கிளப்ப வேண்டாம்: திரேசா கோக்கை சாடிய பிரதமர்

சிரம்பான்:

நாட்டில் தேவையில்லாத சர்ச்சைகளை யாரும் கிளப்ப வேண்டிய அவசியமில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை நினைவுறுத்தினார்.

ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்கின் அறிக்கை தேவையற்றது. அது நம்பிக்கை கூட்டணியின் நிலைப்பாடு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜசெக உதவித் தலைவரான அவரின் அறிக்கை, இந்த நாட்டில் உள்ள சமூகத்திற்கு பொருந்தாத சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எந்தவொரு அரசியல் தலைவரும் கூட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு தெளிவான ஆலோசனைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய முடியும்.

இதன் மூலம் நம் சமூகத்தில் பொருத்தமற்ற சர்ச்சையை உருவாக்குவதை தடுக்க முடியும்.

இதை திரேசா கோக் போன்ற அரசியல் தலைவர்கள் உணர வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

ஹலால் சான்றிதழ் விதிமுறை தொடர்பாக செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset