நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உலக வங்கி இந்தியத் தலைவர்:  ஜுனைத் கமால் அஹமதுக்கு புதிய பதவி

வாஷிங்டன்:

உலக வங்கி இந்தியப் பிரிவுத் தலைவராக உள்ள ஜுனைத் கமால் அஹமது, பன்னாட்டு முதலீட்டு உத்தரவாத முகமையின் (எம்ஐஜிஏ) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக வங்கி குழுமத்தின் ஒரு பிரிவாக பன்னாட்டு முதலீட்டு உத்தரவாத முகமை செயல்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்குக் காப்பீட்டு உத்தரவாதத்தை அந்த முகமை அளித்து வருகிறது.

இந்நிலையில், எம்ஐஜிஏவின் புதிய துணைத் தலைவராக உலக வங்கியின் இந்தியப் பிரிவுத் தலைவர் ஜுனைத் கமால் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுவார். தனது அனுபவத்தின் மூலமாக சர்வதேச சூழல்களைப் புரிந்து கொண்டு உலக வங்கியின் உறுப்பு நாடுகளுக்கு சிறந்த முறையில் அவர் சேவையாற்றுவார் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 16ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்கவுள்ள ஜுனைத் அஹமது, வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset