
செய்திகள் வணிகம்
தொழிற்சாலையை மூடிவிட்டு 100 ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்த சமூக ஊடகப் பிரபலம், கைருல் அமிங்
கோலாலம்பூர்:
இளம் தொழிலதிபரும் சமூக ஊடகப் பிரபலமுமான கைருல் அமிங் (Khairul Aming) தமது ஊழியர்களுக்காகச் செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.
கிளந்தான் மாநிலத்தில் உணவு உற்பத்தித்தொழில் செய்துவரும் அவர் தமது தொழிற்சாலையை 5 நாள்களுக்கு மூடிவிட்டு அதில் வேலை செய்யும் 100 ஊழியர்களைப் பினாங்கு மாநிலத்திற்கு விடுமுறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Instagram-இல் அவர் பதிவேற்றிய அந்தக் காணொளியை இரண்டு மணி நேரத்தில் 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்தனர்.
ஊழியர்கள் தங்குவதற்கு கைருல் 5 நட்சத்திரத் தங்கும் விடுதி அறைகளுக்கும் ஏற்பாடு செய்தார். செலவுக்காக அவர்களுக்குப் பணமும் கொடுத்துள்ளார்.
தமது வர்த்தகத்துக்காக அயராமல் உழைக்கும் ஊழியர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கவேண்டும் என்பதே அந்த விடுமுறையின் நோக்கம் என்று 31 வயதாகும் கைருல் தமது Instagram பதிவில் குறிப்பிட்டார்.
பலரும் கைருலின் குணத்தைப் பாரட்டினர்.
கைருல் கடந்த 2021வ்ஆம் ஆண்டு "சம்பால்" வகை உணவுப் பொருளை அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் அவர் அறிமுகப்படுத்திய 2ஆவது "சம்பால்" உணவு மூன்றே நிமிடங்களில் 1.2 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனையானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm