நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் காலமானார் 

சென்னை: 

ஒரு மருத்துவராக தனது அயராத பணிச்சுமைக்கிடையிலும் தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்களிப்பு செய்த ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையது இப்ராஹீம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் காலமானார்.

மலேசியா, சிங்கப்பூர் இரு நாடுகளுக்கும் அடிக்கடி இலக்கிய பயணம் மேற்கொண்டு இனிமையாக உறவாடக்கூடிய நல்ல எழுத்தாளர் அவர். 

1990 களுக்கு முந்தைய காலகட்டத்தில் ஹிமானா சையத் எழுதிய ஆக்கங்கள் இடம்பெறாத இதழ்கள் இல்லை என்றுகூட சொல்லலாம்.

10 சிறுகதை தொகுப்புகள்
7 நாவல்கள், ஒரு கவிதை தொகுப்பு
5 மருத்துவ கட்டுரை தொகுப்பு
6 பொது கட்டுரை தொகுப்புகள்
என்று எழுதிக் குவித்த ஆளுமை அவர்.

தனது இலக்கிய பணிகளுக்கு அச்சு வடிவம் கொடுக்க "மல்லாரி பதிப்பகம்" எனும் வெளியீட்டு நிறுவனமும் நடத்தி வந்தார்.

May be an image of 3 people, people sitting and people standing

டாக்டர் ஹிமானா சையத், வலம்புரிஜான், மு.மேத்தா 

கடந்த பத்தாண்டுகளாக எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திய ஹிமானா சையத் அவர்கள் "நர்க்கிஸ்" மகளிர் மாத இதழின் கௌரவ  ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார்.

நம்பிக்கை மாதப் பத்திரிகையில் தொடக்க காலத்திலிருந்து தொடர்ந்து எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நம்பிக்கை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset