நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்

சேலம்: 

ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர்.

கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், சுற்றுலா வாகனம் மட்டுமின்றி வழக்கமாக ஏற்காட்டுக்கு செல்லும் பேருந்துகளிலும் அதிகளவில் பயணிகள் சென்று வருகின்றனர்.

 
இந்நிலையில், இன்று (ஏப்.30) மாலை ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

11-வது கொண்டு ஊசி வளைவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

அந்த வழியே சென்றவர்கள், ஏற்காடு போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset