செய்திகள் தமிழ் தொடர்புகள்
கை குழந்தையோடு 4 கிலோ தங்கம்: மலேசியாவிலிருந்து சென்னை வந்த தம்பதிகள் கைது
சென்னை:
மலேசியாவிலிருந்து உள்ளாடைகளுக்குள் ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்ததாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 தம்பதியினர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அத்துறையின் தனிப்படை பிரிவினர், விமான நிலையத்திற்கு வந்து பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் 2 தம்பதிகள், 2 குழந்தைகளுடன் வந்தனர்.
வெளியே வந்த அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த அதிகாரிகளிடம் தம்பதியினர், தாங்கள் மலேசியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்றதாகவும், தற்போது வேலை பிடிக்காததால் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் அடுத்தடுத்த கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது.
இதனால் அதிகாரிகள் அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அதில் ஏதும் இல்லாததால், அவர்களை தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர்.
அப்போது 4 பேரும் அவர்களின் உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்கம் வீதம், மொத்தம் 4 கிலோ தங்கம் என ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:38 pm
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு புதிய திட்டம்: இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்
January 17, 2025, 4:17 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை: விஜய் அறிவிப்பு
January 17, 2025, 11:55 am
காணும் பொங்கலில் சுற்றுலா தலங்களில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
January 16, 2025, 9:51 pm
தமிழ் பாரம்பரிய மாதம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
January 15, 2025, 5:57 pm
தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am