நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் நீட் தோ்வு இன்று தொடங்கியது

சென்னை:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு இன்று பிற்பகல் (மே. 5) தொடங்கியது. 

2024-25-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நாடுமுழுவதும் 557 நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் போ் தோ்வை எழுதுகின்றனா். தோ்வின் போது முறைகேடுகளை தவிா்க்க மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தோ்வு நடைபெறுகிறது. ஜூன் 14-ஆம் தேதி நீட் தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை தவிர வேறு எந்த பொருட்களையும் மாணவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுத வரும் மாணவிகள் காதணி, செயின் உள்ளிட்ட நகைகளை அணிவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதே போல் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த விதமான மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. 

தேர்வு மையங்களின் வாசல்களில் காவல்துறையினர் மாணவ மாணவிகளை தீவிரமாக பரிசோதனை செய்த பிறகே தேர்வு எழுத அனுமதித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset